குட் நியூஸ்! இனிமே சிம் கார்டு ரீசார்ஜ் செய்யாமலே ஆக்டிவாக இருக்கும்!
சிம்கார்டுகளில் ரூ. 20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் தங்களுடைய நம்பர்களை தக்க வைத்து கொள்ளலாம் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை : பிஎஸ்என்எல் (BSNL) , ஜியோ (JIO) , ஏர்டெல் (Airtel), வோடபோன் (vi), போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், ரூ. 20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என்று TRAI அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட காரணத்தால் இரண்டு சிம்கள் வைத்து பயன்படுத்தி வந்த பயனர்கள் மற்றோரு சிம்கார்டில் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தனர். ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் சிம் கார்ட் செயல்பாடு தடை செய்யப்பட்டு விடுமோ என்ற தலைவலியும் அவர்களுக்கு இருந்தது. எனவே, இதன் காரணமாக, TRAI சமீபத்தில் ஒரு சிம் கார்டு 90 நாட்கள் வரை ரீசார்ஜ் செய்யப்படாத நிலையிலும் செயல்பாட்டில் இருக்கும் வசதியை அறிவித்திருந்தது.
இதனையடுத்து, தற்போது 90 நாட்களுக்குப் பிறகு, சிம் கார்டில் ரூ.20 ப்ரீபெய்ட் பேலன்ஸ் இருந்தால், அது செலவிடப்பட்டு, அந்த 90 நாட்களிலிருந்து மேலும் 30 நாட்கள் அதிகமாக சேவை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் ரூ. 20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைத்து கொள்ளலாம்.
இந்த 120 நாட்கள் முடிந்த பிறகு, பயனர்களுக்கு 15 நாட்கள் கிரேஸ் காலம் வழங்கப்படும். கிரேஸ் காலம் என்றால் 120 நாட்கள் முடிந்த பிறகு TRAI வழங்கும் 15 நாட்களுக்கான கூடுதல் அவகாசமாகும். இந்த காலத்தில் பயனர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த சிம் கார்டின் சேவை நிரந்தரமாக முடக்கப்படும்.இந்த 15 நாட்கள் காலத்தின் உள்ளேயே, சிம் கார்டை மீண்டும் செயல்படுத்த தேவையான ரீசார்ஜ் செய்வதன் மூலம் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025