மாணவர்களுக்கு தள்ளுபடி விலையில் ஐபாட், மேக்புக்ஸ்…! ஆப்பிளின் அசத்தல் திட்டம் .!

ஆப்பிள் மாணவர்களுக்கான சிறப்பு தள்ளுபடி திட்டமான ‘பேக் டு யுனிவர்சிட்டி’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் ஆப்பிள் தனது சிறப்பு தள்ளுபடி திட்டமான ‘பேக் டு யுனிவர்சிட்டி’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ‘பேக் டு யுனிவர்சிட்டி’ திட்டத்தின் கீழ், பேக் டு யூனிவர்சிட்டி திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் குறைந்த விலையில் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் மேக்புக்குகளை வாங்க முடியும்.
தற்பொழுது, தொடங்கியிருக்கும் ஆப்பிளின் ‘பேக் டு யுனிவர்சிட்டி’ ஆஃபர் செப்டம்பர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும். அதுவரை மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளலாம்.
MacBook Air (M1):
ரூ.99,900 விலையுள்ள மேக்புக் ஏர் (எம்1) தற்போது, தள்ளுபடி விலையில் ரூ.10,000 குறைக்கப்பட்டு ரூ.89,900 என்ற விலையில் கிடைக்கிறது. இதனை வாங்குபவர்களுக்கு ரூ.19,900 மதிப்புள்ள ஏர்போட்ஸ் 3 (3 ஜென்) இலவசமாக கிடைக்கும். கூடுதலாக, மூன்று மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி+ சந்தா இலவசமாக வழங்கப்படும்.

MacBook Air (M2):
ரூ.1,14,900 விலையுள்ள மேக்புக் ஏர் (எம்2) தற்போது, தள்ளுபடி விலையில் ரூ.10,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.1,04,900 என்ற விலையில் கிடைக்கிறது. இதனை வாங்குபவர்களுக்கு ரூ.19,900 மதிப்புள்ள 3 ஜென் ஏர்போட்ஸ் 3 இலவசமாக கிடைக்கும். கூடுதலாக, மூன்று மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி+ சந்தா இலவசமாக வழங்கப்படும்.

MacBook Air 15-inch (M2):
15 இன்ச் அளவுடன் ரூ.1,34,900 விலையுள்ள மேக்புக் ஏர் (எம்2) தற்போது, தள்ளுபடி விலையில் ரூ.10,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.1,24,900 என்ற விலையில் கிடைக்கிறது. இதனை வாங்குபவர்களுக்கு ரூ.19,900 மதிப்புள்ள 3 ஜென் ஏர்போட்ஸ் 3 இலவசமாக கிடைக்கும். கூடுதலாக, மூன்று மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி+ சந்தா இலவசமாக வழங்கப்படும்.

iMac desktop:
ரூ.1,29,900 விலையுள்ள ஐமேக் டெஸ்க்டாப் தற்போது, தள்ளுபடி விலையில் ரூ.10,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.1,24,900 என்ற விலையில் கிடைக்கிறது. இதை வாங்கினால் ரூ.19,900 மதிப்புள்ள 3 ஜென் ஏர்போட்ஸ் 3 இலவசமாக கிடைக்கும். கூடுதலாக, மூன்று மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி+ சந்தா இலவசமாக வழங்கப்படும்.

iPad Pro 11:
ரூ.81,900 விலையுள்ள ஐபாட் ப்ரோ 11 தற்போது, தள்ளுபடி விலையில் ரூ.10,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.76,900 என்ற விலையில் கிடைக்கிறது. இதை வாங்கினால் ரூ.19,900 மதிப்புள்ள 3 ஜென் ஏர்போட்ஸ் 3 இலவசமாக கிடைக்கும். கூடுதலாக, மூன்று மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி+ சந்தா இலவசமாக வழங்கப்படும்.

இந்த சாதனங்களை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது ஆப்பிள் ஸ்டார்களில் வாங்கிக்கொள்ளலாம்.