இந்தியாவில் அறிமுகமாகிறது Lava Yuva 3 Pro.! எப்போது தெரியுமா.?

Published by
செந்தில்குமார்

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா (Lava), கடந்த பிப்ரவரி மாதம் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர் மற்றும் 5,000mAh உடன் லாவா யுவா 2 ப்ரோ (Lava Yuva 2 Pro) ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது இதே யுவா சீரிஸில் லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் அறிமுகத்தை உறுதி செய்து அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள டீசரில், லாவா யுவா 3 ப்ரோ ஆனது டிசம்பர் 14ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. அந்த டீசரில் போனின் பேனலின் இடதுபுறம் மேல்பக்கத்தில் எல்இடி பிளாஷுடன் செவ்வக வடிவில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது தெரிகிறது.

இன்பினிக்ஸ்-ன் புதிய பட்ஜெட் லேப்டாப்.? விரைவில் இந்தியாவில் அறிமுகம்.!

இதற்கிடையில் அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை போன்றவை சமூக ஊடகங்களில் கசிந்துள்ளன. அந்த கசிவுகளின் படி, லாவா யுவா 3 ப்ரோவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 பஞ்ச் ஹோல் எச்டி+ டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1) உடன் யூனிசோக்கின் டி616 (UNISOC T616) பிராஸசர் பொருத்தப்படலாம். இது ஆண்ட்ராய்டு 13 மூலம் இயக்கப்படுகிறது. கேமராவைப் பார்க்கையில் 50 எம்பி ஏஐ டூயல் கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் பொருத்தப்படலாம்.  யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 18 வாட்ஸ்  வயர்டு சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி இருக்கலாம்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி  இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம். கோல்டன், பச்சை மற்றும் ஊதா ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகும் இந்த போன், ரூ.10,999 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம். லாவா யுவா 3 ப்ரோ ஆனது ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 minute ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

11 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

30 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago