நெட்பிளிக்ஸின் விளம்பர ஆதரவு சந்தா திட்டம்..! ஆறு மாதங்களில் இத்தனை பயனர்களா..?

Netflixjob

நெட்பிளிக்ஸின் புதிய விளம்பர ஆதரவு சந்தா திட்டம் 5 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை ஈர்த்துள்ளது.

பிரபல ஸ்ட்ரீமிங் வீடியோ தளமான நெட்பிளிக்ஸின் புதிய விளம்பர ஆதரவு சந்தா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, 5 மில்லியன் (50 லட்சம்) மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை ஈர்த்துள்ளது என நெட்பிளிக்ஸின் உலகளாவிய விளம்பரத் தலைவர் ஜெர்மி கோர்மன் கூறியுள்ளார்.

நெட்பிளிக்ஸ் மாதத்திற்கு $10 (ரூ.824) முதல் தொடங்கும் விளம்பரமில்லா திட்டங்களுக்கு பதிலாக, கடந்த நவம்பரில் அமெரிக்கா உட்பட 12 நாடுகளில் விளம்பரங்களுடன் மாதத்திற்கு $7 (ரூ.577) என்ற புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்பொழுது, ஆன்லைனில் திரைப்படங்களை காணும் பார்வையாளர்களை ஈர்க்கும் போட்டி தீவிரமடைந்துள்ளதால், இந்த திட்டம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. கடந்த புதன்கிழமை நெட்பிளிக்ஸ் அதன் முதல் விளக்கக்காட்சியை விளம்பரதாரர்களுக்கு அப்பிரன்ட்ஸ் (upfronts) எனப்படும் வருடாந்திர விளம்பர விற்பனை நிகழ்வில் காட்சிப்படுத்தியது.

அதில், பலதரப்பட்ட பார்வையாளர்களுக்காக வேறு எந்த பொழுதுபோக்கு நிறுவனமும் பல நாடுகளில் பல வகைகளில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை உருவாக்க விரும்புவதில்லை என்று நெட்பிளிக்ஸின் தலைமை உள்ளடக்க அதிகாரி பெலா பஜாரியா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh