ஆப்பிள் தயாரிப்புகளில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த குழு (CERT-In), மூன்று நாட்களுக்கு முன்னதாக சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களில் சைபர் தாக்குதல்களால் ஏராளமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறியது. இதையடுத்து, பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை இந்திய அரசாங்கம் வெளியிட்டது. இப்போது, சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் தயாரிப்புகளிளிலும் இதே போன்ற ஏராளமான […]
டிசம்பர் மாதம் தொடங்கியது முதல் ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் முதல் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த அறிமுகங்களில் முக்கிய சிறப்பம்சமாக புதிதாக அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் உள்ளது. இப்போது இந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான பட்ஜெட் விலையில் உள்ள ஸ்மார்ட்போன்களை காணலாம். iQOO 12 5G ஐக்யூ (iQOO) நிறுவனம் கடந்த 12ம் தேதி கேம் […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு புதிய ஜியோடிவி பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் மூலம் பயனர்கள் ஒரே இடத்தில் பல ஓடிடி (OTT) சேவைகளை அணுக முடியும். இந்தத் திட்டங்களின் மூலம், இனி ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனித்தனி சந்தாக்களை நீங்கள் வாங்க வேண்டியதில்லை. ஜியோ பயனர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் செய்திகளைத் தங்களின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் […]
AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது. டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் […]
போகோ (POCO) நிறுவனம் அதன் சி-சீரிஸில் போகோ சி65 (POCO C65) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போகோ சி65 ஆனது நிறுவனத்தின் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.74 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி ஃபிளாஷுடன் டிரிபிள் ரியர் கேமரா சென்சார்கள் உள்ளன. 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. மேலும், இதில் கார்னிங் கொரில்லா […]
விவோ (Vivo) நிறுவனம் அதன் எக்ஸ்100 சீரிஸ் (X100 Series) ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸில் விவோ எக்ஸ்100 (Vivo X100) மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) என மாடல்கள் உள்ளன. இதில் தனித்துவமான விவோ வி3 சிப் 1 ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9300 என்கிற ஃபிளாக்ஷிப் சிப்செட்டுடன் இணைக்கப்ட்டுள்ளது. இதனுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.78 இன்ச் எல்டிபிஓ கர்வ்டு அமோலெட் டிஸ்பிளே உள்ளது. […]
சாம்சங் (Samsung Galaxy) ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, சாம்சங் பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சில கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), பழைய மற்றும் புதிய மாடல் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டி, டிசம்பர் 13ம் தேதி பாதுகாப்பு எச்சரிக்கைக்கான அறிவிப்பை […]
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10 வது ஆண்டு விழா நிறைவை பயனர்களுடன் இனைந்து கொண்டாடும் வகையில், டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 17ம் தேதி வரை கம்யூனிட்டி சேல் (OnePlus Community Sale) எனும் விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள், ஆடியோ டிவைஸ்கள் மட்டுமல்லாமல் ஸ்மார்ட் டிவிகள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சில சாதனங்களுக்கு ஐசிஐசிஐ பேங்க் கார்டு மற்றும் ஒன்கார்டு பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.5,000 வரையிலான உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் […]
கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி ஃபயர்-போல்ட் (Fire Blot), ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் (Rise Luxe) ஸ்மார்ட்வாட்ச்சை ரூ.1,499 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது புதிதாக ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய ஃபயர்-போல்ட் ஸ்ட்ரைக் (Fire-Boltt Strike) ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சதுர வடிவ டயல் கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச், ஜின்க் அலாய் மிடில் பிரேமைக் கொண்ட முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 410 x 502 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 1.95 […]
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா (Lava) பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பிரிவில் புதிய வரவாக லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. யுவா 3 ப்ரோ ஆனது பிரீமியம் கிளாஸ் பேக் டிசைன் உடன் 8ஜிபி ரேம் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இதில் பஞ்ச்-ஹோல் கட்டவுட்டுடன் 1600 x 720 பிக்சல் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் […]
ரியல்மீ நிறுவனம் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை சந்தைகளில் அறிமுகம் செய்து பல பயனர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறது. இப்போது மீண்டும் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் சாம்பியன் சீரிஸில் (C Series) புதிய ரியல்மீ சி67 5ஜி (Realme C67 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மியின் சி சீரிஸில் முதல் 5ஜி போனான இதில், ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் போலவே இருக்கக்கூடிய மினி கேப்ஸுல் 2.0 அம்சம் உள்ளது. […]
கடந்த டிசம்பர் 12ம் தேதி ஐக்யூ (iQOO) நிறுவனம் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. ஐக்யூ 12 5ஜி ஆனது இந்தியாவின் முதல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராஸர் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 1.5K பிக்சல் ரெசல்யூஷன், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 […]
கடந்த 2022ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் ‘செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் எஸ்இ போன்ற மாடல்களுக்கு மட்டுமே இந்த திட்டம் இருந்தது. பிறகு ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்கள் வரை விரிவுபடுத்தியது. இப்போது, செல்ஃப் சர்வீஸ் ரிப்பேர் திட்டத்தை 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ, 15 இன்ச் […]
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐடெல் (Itel), சமீபத்தில் A சீரிஸில் ஐடெல் A05s (Itel A05s) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதில் ஆரம்பத்தில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மட்டுமே அறிமுகமானது. இப்போது ஐடெல் A05s போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை வெளியிட்டுள்ளது. மேலும், இதில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐடெல் A05s இல் இருக்கக்கூடிய 5 எம்பி கேமரா அமைப்பிற்குப் பதிலாக, […]
பல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் புத்தாண்டை சிறப்பான அறிமுகத்துடன் தொடங்க, தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. அந்த வகையில் ரெட்மி நிறுவனம், அதன் நோட் ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் […]
கடந்த செப்டம்பர் மாதம் நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் உட்பட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சாதனமான ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சிறிய கேமரா மற்றும் மைக்ரோஃபோனுடன் வருகிறது. இதில் இருக்கும் ஹே மெட்டா (Hey Meta) என்ற குரல் அம்சத்தின் மூலம் […]
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பல துறையில் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார். அதன்படி, டெஸ்லா எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அசத்தி வரும் எலான் மஸ்க், சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க், மனித உருவ ரோபோக்களை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். […]
மிகவும் பிரபலாமான மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப், தனது பயனர்களை தக்கவைக்கவும், புதிய பயனர்களை தன்வசம் ஈர்க்கவும் வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ‘சேனல் அலெர்ட்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது அடுத்த அம்சமாக அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் ஒரு தனிப்பட்ட நபரின் சாட்டிலோ அல்லது குரூப் சாட்களிலோ இருக்கக்கூடிய மெசேஜை பின் […]
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐக்யூ (iQOO), அதன் கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போனான புதிய ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G)-யை டிசம்பர் 12ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, இன்று ஒரு பிரம்மாண்ட நிகழ்வில் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது அனைவரும் கூறும்படி உண்மையிலேயே ஒரு கேம் சேஞ்சர் ஸ்மார்ட்போன் என்று சொல்லலாம். ஏனெனில் பயனர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தனியாக சூப்பர்கம்ப்யூட்டிங் க்கியூ1 (Supercomputing Chip […]