SamAltman [File Image]
ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நமது உலகில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் டெக்னாலஜி என்பது அதிக அளவில் வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்த டெக்னாலஜி உலகையே புரட்டிப்போடும் விதமாக சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, ஒரு புதிய சாட்போட்டைக் கண்டுபிடித்தது.
அதுதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘சாட் ஜிபிடி (Chat GPT)’ ஆகும். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட சாட் ஜிபிடி, அறிமுகமான சில வாரங்களிலேயே பத்து லட்சம் பயனர்களை ஈர்த்தது. தொழில், கல்வி என பலத்துறைகளில் புரட்சியை ஏற்படுத்திய சாட் ஜிபிடி, கவிதைகள், கட்டுரைகள் முதல் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்கள் வரை எழுதித் தரக்கூடிய திறன் கொண்டது.
இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு, 2021ம் ஆண்டிற்கு முன்பு உள்ள தகவலின் அடிப்படையில் இணையத்தில் ஆராய்ந்து பதில் தரக்கூடியது. இதனால் மனிதன் செய்யக்கூடிய வேலைகள் பாதியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு வேலைகள் இல்லாமல் கூடப் போகலாம் என்ற நிலை ஏற்படலாம்.
மேலும், சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது ஏஐ சாட் போட்களை வெளியிட்டன. பல தொழிநுட்ப நிறுவனங்கள் புதிய ஏஐ-ஐ உருவாக்குவதில் ஈடுபட்டன. இருந்தும் சாட் ஜிபிடிக்கு இணையாக வர முடியவில்லை. இந்நிலையில், அதிர்ச்சித் தரக்கூடிய ஒரு தகவலை ஓபன் ஏஐ நிறுவனம் வெளிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாம் ஆல்ட்மேனின் நிர்வாக குருவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழு உடனான தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாக இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
எனவே, சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி நீக்கும் முடிவை எடுத்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தலைமை நிர்வாகி அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…