டெஸ்லா நிறுவ சிறந்த இடம்… எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்த கர்நாடகா.!

கர்நாடகாவில் தொழில் தொடங்க எலான் மஸ்க்கிற்கு காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு, இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் தொழில் தொடங்குமாறு காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து கர்நாடக தொழில்துறை அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல், தனது ட்விட்டர் பதிவில், டெஸ்லா தனது நிறுவனத்தின் இந்திய விரிவாக்கும் பணிகளுக்கு கர்நாடகா தான் சிறந்த இடம் என்று, எலான் மஸ்க்கை டேக் செய்து பதிவிட்டுள்ளார். டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலையை உருவாக்க விரும்பினால் கர்நாடகா அதற்கு சிறந்த இடம் என அவர் மேலும் கூறினார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் மஸ்க்கை சந்தித்த மோடி, இது குறித்து கூறியிருந்தார். இந்தியாவில் மின்சார வாகனம் வேகமாக வளர்ந்து வருவதனால், இந்தியாவில் முதலீடு செய்யுமாறு டெஸ்லாவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, மஸ்க் கூறும்போது அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும் டெஸ்லாவின் அடுத்த புதிய தொழிற்சாலை அமைய இருக்கும் இடம் பற்றிய தகவல் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஸ்க் தனது ஸ்டார்லிங்க் சேவைகளையும் இந்தியாவில் கொண்டுவர ஆர்வம் காட்டினார். Starlink என்பது, ஸ்பேஸ்-எக்ஸ் ஆல் இயக்கப்படும், செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை வழங்குநராகும்.
#Karnataka: The Ideal Destination for #Tesla‘s Expansion into #India
As a #progressive state & a thriving hub of #innovation & #technology, Karnataka stands ready to support and provide the necessary facilities for Tesla and other ventures of @elonmusk, including #Starlink.… pic.twitter.com/XUBk4c1Cnw
— M B Patil (@MBPatil) June 23, 2023