விடீயோக்களை நீக்கினால் உங்கள் சேனல் ‘காலி’.! எச்சரிக்கும் YouTube.!

Published by
மணிகண்டன்

You Tube : உங்கள் சேனலில் விடீயோக்களை டெலீட் செய்தால் உங்கள் YouTube சேனலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும்.

தற்போதைய நவீன பொழுதுபோக்கு உலகில் youtube தளத்தின் பயன்பாடு என்பது மிக அதிகமாகவே உள்ளது. அதனைப் பொழுதுபோக்கு தளமாக உபயோகிப்பவர்களை போலவே, அதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகிக்கொண்டே வருகிறது.

பல youtube சேனல்கள் நல்ல விதமாக மக்களை கவரும் விதத்தில் வீடியோக்கள் போட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒரு சிலர், சில தவறான பதிவுகளையோ, அல்லது ஒருவரது மனதை புண்படுத்தும் விதமாகவோ, ஒருதரப்பு சார்பு தகவலையோ பதிவிட்டு விடுகின்றனர். இது சில சமயம் சர்ச்சையாக மாறிவிடுகிறது.

இந்த காரணங்களை கருத்தில் கொண்டு அந்த youtube சேனல்கள், குறிப்பிட்ட வீடியோவை தங்கள் தளத்தில் இருந்து அவ்வப்போது நீக்கியும் வருகின்றனர். அதேபோல் காப்பி ரைட் பிரச்சனை காரணமாகவும் youtubeஇல் இருந்து வீடியோக்கள் நீக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது youtube இல் இருந்து வீடியோக்களை நீக்குவது தொடர்பாக ஒரு எச்சரிக்கை பதிவு வெளியாகி உள்ளது. youtube தளத்தின் முக்கிய அதிகாரி (Todd B) என குறிப்பிட்டுள்ள ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் அதனை பதிவிட்டு உள்ளார்.

அதில், தங்கள் சேனலில் வீடியோ தவறாக இருப்பின் அதனை டெலிட் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக அதனை பொதுமக்கள் பார்வைக்கு படாதவாறு மறைத்துவிட (Hide) வேண்டும். இதனை தவிர்த்து நீங்கள் தொடர்ந்து வீடியோக்களை டெலிட் செய்து வந்தால், ஒருவேளை உங்கள் சேனல் பொதுமக்களிடம் காட்டப்படாதவாறு மாறிவிடும் (Hide) என ஒரு எச்சரிக்கை பதிவை குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!

சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில்…

24 minutes ago

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…

48 minutes ago

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

9 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

10 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

11 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

12 hours ago