Realme Narzo N53 [Image source : twitter/ @TechStyle_47 ]
குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான போன் வாங்கவேண்டும் என்றால் உங்களுக்காகவே Realme நிறுவனம் புதிய போனை களமிறக்கியுள்ளது.
Realme Narzo N53
Realme நிறுவனம் புதியதாக பல அம்சங்களை கொண்ட பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், வரும் மே 18-ஆம் தேதி இந்தியாவில் “RealmeNarzo N53 “ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கான டீசரையும் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme Narzo N55-க்குப் பிறகு நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது Narzo N-சீரிஸ் இதுவாகும். இந்நிலையில், இப்போது Realme Narzo N53 இன் சில முக்கிய அம்சங்களை பற்றி பார்க்கலாம்.
பேட்டரி எப்படி..?
Realme Narzo N53 (33W SUPERVOOC) வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி யூனிட்டைக் கொண்டுள்ளது. எனவே, 34 நிமிடங்களில் ஃபோனை 0 இருந்து 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும். அதுபோல, 68 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்துவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த போன் அதிக வெப்பநிலை பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. எனவே, வெப்பம் அதிகரிக்கும் பிரச்சனை பெரிதாக இருக்காது. மொபைல் அறிமுகத்திற்கு முன் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும்.
மற்ற அம்சங்கள்..?
இந்த ஃபோன் 4-ஜிபி ரேம்(RAM) மற்றும் 64-ஜிபி சேமிப்பகத்தை (storage) கொண்டுள்ளது. மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை (fingerprint) ஸ்கேனரைக் கொடுள்ளது. இந்த போன் 6.72 அங்குலம் டிஸ்பிளே-வை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை பின் பகுதியில் 50 MP + 2 MP கொண்டுள்ளது. 8 எம்பி முன்பக்க கேமராவை கொண்டுள்ளது.
விலை என்ன வாங்கலாமா..?
Realme Narzo N53 போன் ரூ.9,990 விலையுடன் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இப்படி ஒரு பட்ஜெட்டில் இதுபோல ஒரு அசத்தலான போனை கண்டிப்பாக வாங்கலாம்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…