காபூலில் நிகழ்ந்த ராக்கெட் தாக்குதலில் ஒருவர் பலி,2 பேர் காயம் .!

காபூலில் உள்ள பல பகுதிகளில் 10 ராக்கெட்டுகளை வீசி நடைபெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காபூலின் லேப்-இ-பஜார் பகுதியில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உள்துறை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது .அதிலும் லேப்-இ-பஜார் பகுதியில் உள்ள ஹவாஷினியில் பிடி9,ஜான் அபாத் பகுதியில் பிடி9,குவாஜா ரவாஷ் பகுதியில் பிடி15 உள்ளிட்ட பல பகுதிகளில் 10 ராக்கெட்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் , இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் டோலோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.முதல் தாக்குதல் தற்போது நடைபெற்ற லேப்-இ-ஜார் பகுதிக்கு அருகிலுள்ள இடத்தில் நடந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025