குட்டையா இருக்கிறோமேனு கவலைப்படாதீங்க….! உங்களுக்காக தான் இந்த டிப்ஸ்…!

Published by
லீனா

உயரமாக வளர வேண்டும் என விரும்புபவர்கள் கீழ்கண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். 

இன்று அதிகமானோர் தங்கள்  உயரத்தை குறித்து கவலைப்படுவதுண்டு. ஒருவரின் உடல் தோற்றத்திற்கேற்றவாறு, அவர்களது உயரம் இருக்க வேண்டியது அவசியமானதாகும். உடற்பயிற்சி மற்றும் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவைப் உட்கொள்வது நாம் உயரமாக வளர உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பொதுவாக ஒரு நபரின் உயரம் 18 வயது முதல் 20 வயது வரை அதிகரிக்கும். அந்த வயதிற்குப் பிறகு, வளர்ச்சி கிட்டத்தட்ட மிகக் குறைவு. இதன் விளைவாக ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியமான உணவைக் கொண்டிருப்பது மிக முக்கியமானது. உயரமாக வளர கீழ்கண்ட 5 உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பீன்ஸ்

காய்கறிகளில் பீன்ஸ் அதிகமான புரதசத்துக்களை கொண்ட காய்கறியாகும். எனவே இந்த பீன்ஸை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொண்டால், இது நாம் உயரமாக வளர வழிவகுக்கும்.

சிக்கன்

chickentikkamasalachickentikkamasalaநம்மில் சிறியவர்கள் முதியவர்கள் வரை அனைவருமே சிக்கன் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த சிக்கனில் அதிக அளவில் புரத சத்து காணப்படுகிறது. நாம் அதிகமாக சிக்கன் கறியை உட்கொண்டால், அது நமது வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

முட்டை

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில், முட்டை மிகவும் சத்துள்ள உணவாகும். அந்தவகையில், முட்டையில் புரதசத்து அதிகமாக காணப்படுகிறது.  இது நமது உயரத்தை அதிகரிக்க உதவுவதோடு, எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.

பால்

பாலில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இது, நமது உயரத்தை அதிகரிக்க உதவுவதோடு, எலும்பு ஆரோக்கியத்திற்கும் உடலின் பொது வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பாதாம்

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர்கள் அடிக்கடி பாதாமை உட்கொள்வது நல்லது. இது நமது உடல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Published by
லீனா
Tags: Foodheight

Recent Posts

கேரளா : மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி…காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…

57 minutes ago

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்குப் பெருமை – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!

சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…

1 hour ago

உல்லு, ஆல்ட் உள்பட ஆபாச OTT தளங்களுக்கு தடை! மத்திய அரசு அதிரடி!

டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP…

2 hours ago

மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய யஷ் தயால்! போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு!

ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயால் மீது, ராஜஸ்தானைச் சேர்ந்த 17…

2 hours ago

“இந்தியர்களை வேலைக்கு எடுக்காதீங்க” – கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜூலை 23, 2025 அன்று வாஷிங்டனில் நடந்த செயற்கை நுண்ணறிவு (AI)…

3 hours ago

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்.!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 9 துறைமுகங்களில் ஒன்றாம்…

3 hours ago