கிரீன்லாந்தில் ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் பனிப்பாறைகள்.
பொதுவாக கோடைகாலத்தில் கிரீன்லாந்து நாட்டில், 50 சதவீத பனிப்பாறைகள் உருகுவது வழக்கம். ஆனால் குளிர்காலத்தில் மீண்டும் இந்த பாறைகள் உருவாகிவிடும். இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கடந்த சில வாரங்களாக, கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், பனி உருகுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கிரீன்லாந்தில், 24 மணி நேரத்தில், 1,100 கோடி டன் பனிப்பாறைகள் உருகி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாசா, ‘கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் ‘பெரிய பனி உருகும் நிகழ்வுக்கு ஆளாகியுள்ளது.
பில்லியன் டன்களில் உருகும் நீர், அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்து, கடலின் நீர்மட்டம் உயர்கிறது. புளோரிடா மாநிலம் முழுவதையும், கிட்டத்தட்ட ஐந்து அங்குல நீரில் மூடுவதற்கு இந்த நீர் போதுமானது. ஆதிக்க வெப்பத்தால், அதிக அளவிலான பனிப்பாறைகள் உருகியுள்ளது என்றும், உலகம் வெப்பமயமாதல் போன்ற பாதிக்கும் காரணங்களால், எதிர்காலத்தில், இன்னும் மோசமான நிலையை சந்திக்க வாய்ப்புள்ளது.’ என்றும் தெரிவித்துள்ளது.
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…