மறைந்த நடிகர் புனீத் ராஜின் இரு கண்களால் பார்வை பெற்ற 4 இளைஞர்கள்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வாரம் தனது வீட்டில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நெஞ்சு வலி காரணமாக கீழே சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பின் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் சினிமா ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தியது.நடிகர் புனித் ராஜ்குமார் 48 இலவச பள்ளிக்கூடங்கள், 20 ஆதரவற்றோர் இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், சுமார் 1,800 மாணவ மாணவியரின் கல்வி என தன் வருமானத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கண்களும் பெங்களூரில் உள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டன. பின் நவீன தொழில்நுட்பம் மூலம் இரண்டு கண்களும் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினை கொண்ட நான்கு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…