லிபியாவில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் உயிரிழப்பு..!

லிபியா நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் வாழ்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் அகதிகள் படகுகளில் செல்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக செல்லும்பொழுது அடிக்கடி கடலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 75 அகதிகளை ஏற்றி கொண்டு படகு புறப்பட்டுள்ளது.
இந்த படகு லிபியாவின் மேற்கு கடலோர மாவட்டமான கும்சியிலிருந்து சென்றுள்ளது. திங்கள்கிழமையன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு திடீரென்று கவிழ்ந்துள்ளது. இதில் 57 அகதிகள் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவை சேர்ந்த 18 அகதிகள் படகு கவிழ்ந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் செய்தி தொடர்பாளர் சஃபா மிஷெலி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025