உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிற்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அனைத்து நாடுகளும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை முதல்முறையாக மனிதருக்கு செலுத்தி பரிசோதனை செய்துள்ளனர்.
இந்த, சோதனையின் முடிவை பொறுத்தே அடுத்து சில நாட்களில் மேலும், 300 பேருக்கு தடுப்பூசி சோதனை செய்யப்படும் எனவும், இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 6,000 பேருக்கு தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு உலகளவில் தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் எனவும், இம்பீரியல் கல்லூரி தெரிவித்துள்ளது. இதற்கு முன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி பரிசோதனைகள் இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…