நவரசா தொடரின் ட்ரைலர் இன்று காலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது யூடியூப் சேனனில் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ’நவரசா’ ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளனர். 9 கதைகளை உள்ளடக்கியுள்ள இந்த இணையதள தொடர் ஒவ்வொன்றும் 9 உணர்ச்சிகளை அடிப்படியாக கொண்டது.
இந்த “நவரசா” வெப் தொடரை கவுதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், வஸந்த் சாய், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு உணர்ச்சிகளை படமாக்கியுள்ளனர்.
இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், அதர்வா, யோகி பாபு, அசோக் செல்வன் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பார்வதி, ரம்யா நம்பீசன், பிரசன்னா, அதிதி பாலன், ரித்விகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதற்கான டீசர் கடந்த 9- ஆம் தேதி வெளியானது, இதனை தொடர்ந்து நவரசா தொடரின் ட்ரைலர் இன்று காலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது யூடியூப் சேனனில் வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் எதிர்பார்த்த படி மனிதர்களின் ஒன்பது உணர்ச்சிகளையும், உள்ளடக்கி அனைவரும் ரசிக்கும் படி வெளியாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி படம் வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…