96 குட்டி ஜானுவிற்கு கொரோனா தொற்று..!!

நடிகை கௌரி கிஷன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை கௌரி கிஷன் 96 படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பது, அனைவர்க்கும் “வணக்கம் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைபடி வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறேன். ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025