மாஸ்டர் படத்தில் தாஸ் கதாபாத்திரம் குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் நேற்று முதல் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது .
வழக்கமாக திரையரங்குகளில் வெளியான படத்தினை இரண்டு மாதங்களுக்கு பின் தான் ஓடிடியில் வெளியிடுவார்கள். ஆனால் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியாகிய 2 வாரங்களிலேயே அமேசான் பிரேமில் வெளியானது. தற்போது வரை மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 220 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “மாஸ்டர் படத்தில் தாஸ் கதாபாத்திரம் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அனைத்து அன்பிற்கும் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய நன்றி”. என்று பதிவிட்டுள்ளார்.
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…