இலங்கை நாட்டில் மாத்தறை மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முகத்தில் தாடி,மீசையுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி உள்ளனர்.
ஆண்கள் வார்டில் அந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறி இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.சற்று நேரத்தில் பரபரப்பான மருத்துவமனையின் மருத்துவர்கள் அந்த நபருக்கு சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த அவர்கள் அந்த நபரை பிரசவ வார்டுக்கு விரைவாக அனுப்பினார்.
பிரசவ வார்டிற்கு முகத்தில் தாடி, மீசையுடன் நபர் ஒருவர் நுழைந்ததும் ஏற்கனவே அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள் அந்த நபரை பார்த்து ஆச்சரியமடைந்தனர். இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்த சம்பவம் மருத்துவமனை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் தாடி மீசையுடன் இருந்த நபர் ஒரு பெண். ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆண்களைப் போலவே வாழ்ந்து வந்து உள்ளார். அதனால் அவருக்கு தாடி, மீசை வளர்ந்து இருக்கிறது. தோற்றத்திலும் மனதளவிலும் ஒரு ஆணாக இருந்தாலும் உடல் அளவில் அவர் ஒரு பெண் தான்.
இந்நிலையில் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை வளர்க்க அந்த நபர் விரும்பவில்லை என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாடி மீசையுடன் இருந்த அந்த நபர் வைத்திருந்த அடையாள அட்டைகளை பார்க்கும் போது அவர் ஆண் என்றே அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் அவர் ஒர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். அவருடைய பெயர் மற்றும் அவர் சார்ந்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…