1000 நாட்களில் 1000 பாடல்கள் எழுதி சாதனை படைத்த பெண்! உலக அளவில் குவிந்து வரும் பாராட்டுக்கள்!

- ஸ்வப்னா 1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
- உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சினிமா திரையுலகை பொறுத்தவரையில், ஆண்களுக்கு ஈடாக பெண்களும் பணியாற்றி வருகின்றனர். சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற அணைத்து துறைகளிலுமே, பெண்கள் கால்பதித்து, பல சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், துபாயில் வாழ்ந்து வரும் இந்திய பெண் ஸ்வப்னா ஆப்ரஹாம் என்ற பெண் தற்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்வப்னா 1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் கடந்த 2017, ஏப்-8-ம் தேதி தனது முதல் பாடலை பதிவு செய்தார். இதனையடுத்து, தனது 1000-வது பாடலை 2020 ஜன-2ம் தேதி அன்று நிறைவு செய்தார். இதனையடுத்து இவருக்கு உலக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஸ்வப்னாவுக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025