குழந்தை அருகில் தாய் பீர் அருந்தி படுத்திருப்பது குற்றமல்ல. இந்த மரணம் அஜாக்கிரதையாக நடைபெற்றதே என கூறி மூரியல் மாரிசன் என்கிற பெண்மணியின் 20 ஆண்டுகால சிறை தண்டனையை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்.
அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மூரியல் மாரிசன் என்கிற பெண்மணி தனது 4 மாத குழந்தையுடன் தன் வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் பீர் குடித்துவிட்டு குழந்தை அருகிலேயே படுத்துறங்கியுள்ளார். அவர் காலையில் கண்விழித்து பார்க்கையில் குழந்தை இறந்து கிடந்துள்ளது.
இதனை அறிந்த காவல்துறையினர், பீர் குடித்துவிட்டு குழந்தை அருகில் படுத்திருந்ததாலே குழந்தை இறந்துள்ளது என மூரியல் மாரிசன் மீது குற்றம் சாட்டினார். இதன் காரணமாக நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.
இதனை எதிர்த்து அந்த பெண் வேறு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், குழந்தை அருகில் தாய் பீர் அருந்தி படுத்திருப்பது குற்றமல்ல. இந்த மரணம் அஜாக்கிரதையாக நடைபெற்றதே. இது விபத்து ஆகும். ஒரு தாய் தன் குழந்தையை வேண்டுமென்றே கொல்ல நினைக்க மாட்டார். என மேரிலேண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்து மூரியல் மாரிசனை விடுதலை செய்துவிட்டது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…