வீட்டில் செல்வம் பெருக இதனையெல்லாம் சரி செய்தாலே போதும்!

Published by
மணிகண்டன்
  • நாம் அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை அதில் பிரதான பிரச்சனை வீட்டில் செல்வம் தங்குவதில்லை. அல்லது பெருகவில்லை.
  • இதற்கு நம் வீட்டை பாதுகாத்து கவனித்து வந்தாலே , வீட்டில் செல்வம் பெருகும். வளம் கொழிக்கும்.

நம் ஒவ்வொருக்கும் ஒரு சில பிரச்சனைகள் உண்டு. அதில் அதிகமானோருக்கு வீட்டில் செல்வம் தங்குவது இல்லை எனவும், வந்த செல்வம் மேலும் வளர்ச்சி பெறவில்லை எனவும் மிகுந்த கவலை அடைவார்கள். அப்படிப்பட்ட சில குறைகளை தீர்க்க நம் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாத்து பராமரித்து வந்தாலே செல்வம் பெருகும்.

இந்த விஷயத்தில் வீட்டில் மிகவும் முக்கியமான அரை என்றால் அது படுக்கையறை தான். ஏனென்றால்,  நமது படுக்கையறையில் தான் நம் செல்வத்தை சேர்த்து வைக்கும் பீரோவை பத்திரமாக வைத்திருப்போம். அப்படி நாம் சேர்த்து வைக்கும் செல்வத்தை பாதுகாக்கும் அறையானது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அந்த அறையில் வெளிச்சம் வரும்படியாக பிரகாசமாக இருக்க வேண்டும். சுற்றுச்சுவர் எந்தவித விரிசல் இல்லாமலும் இருக்க வேண்டும். அப்படி இதில் சேதம் இருந்தால் அதனை உடனே சரி செய்துவிட வேண்டும். அதன்மூலம் துஷ்ட சக்திகள் உள்ளே நுழைய வாய்ப்பு உள்ளது.

மேலும், நம் வீட்டில் பீரோ மற்றும் பூஜையரையானது வடகிழக்கு நோக்கி இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் அதனை சரிசெய்து கொள்ளுங்கள். பூஜை அரை மின்விளக்கு வெள்ளை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். முக்கியமாக தண்ணீர் பைப்களில்  உள்ள தண்ணீர் வீணாக சொட்டுவிழ கூடாது. அதுபோல நம் வீட்டில் செல்வம் வீணாகும் என்பது மரபு. ஆதலால் சொட்டு விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மகாலட்சுமியின் இருப்பிடம் சமுத்திரம் அதனால் சமுத்திரத்தில் இருந்து கிடைக்கும் சங்கு, கிளிஞ்சல்கள் போன்ற பொருள்கள் பூஜை அறையில் இருத்தல் நல்லது.  மகாலட்சுமி எந்திர தகடுகள் வைத்தும் வழிபடலாம். உடைந்த கண்ணாடி பொருட்கள் வீட்டிற்கு எவ்வளவு கெட்டதோ அதே அளவு வீட்டிலுள்ள விரிசல் விழுந்த மரச்சாமான்களும் தான். உடைந்த மரச்சாமான்களை வீட்டிற்குள் வைத்திருக்க கூடாது. அதை சரி செய்து வைத்திருத்தல் அவசியமாகும். பச்சை கற்பூரத்தில் மகாலட்சுமி வாசம் இருக்கும். அதனால் பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்திருப்பது நல்லது. அது நல்ல பலனை கொடுக்கும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

19 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

46 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago