நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்கு பதிவு!

நடிகை மீரா மிதுன் பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவர் பல சர்ச்சைகளில் சிக்கி, இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘மும்பையில் பாதுகாப்பாக உணர்வதால் அங்கு வசிப்பதாகவும், தமிழகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக போலிஸாரையும் விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் அதிகாரி ஒருவர் இவர் போலீசாரை விமர்சித்து பேசிய பேட்டி குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து, நடிகை மீரா மிதுன் ஹோட்டல் அதிகாரி அருணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, இவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025