அதிர்ச்சி… AIMIM டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு எலோன் மஸ்க் என பெயர் மாற்றம்..!

Published by
Edison

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின்(AIMIM) இன் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு எலோன் மஸ்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின் (AIMIM) கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டது. அதன்பின்னர்,ஹேக்கர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பயோவில்  அதன் பெயரை AIMIM இலிருந்து ‘எலோன் மஸ்க்’ என்று மாற்றியுள்ளார். மேலும்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கின் புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேக் செய்யப்பட்ட கணக்கில் புதிய ட்வீட்டுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், பிற ட்வீட்களில் கிரிப்டோகரன்சி குறித்த தகவல்களை ஹேக்கர் பதிவிட்டுள்ளார்.

AIMIM இன் டுவிட்டர் பக்கத்தை சுமார் 6.78 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.ஆனால்,இந்த சைபர் தாக்குதலில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.எனினும்,இது குறித்து AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.

 

இதேப் போன்று,கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்தூர் காவல்துறையின் வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டு,பிரதமர் நரேந்திர மோடிக்கு கூறியது போன்ற ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றது.அதில் “இலவச காஷ்மீர்”  மற்றும் பாகிஸ்தானைப் பாராட்டி பேசியது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இதற்கிடையில், ஏப்ரல் 2021 இல், ஆந்திர அமைச்சர் மெகபதி கௌதம் ரெட்டியின் டுவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து,இதுகுறித்து புகார் அளிக்க சைபர் போலீசாரை அமைச்சர் அணுகியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகின.

Published by
Edison

Recent Posts

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

24 minutes ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

38 minutes ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

1 hour ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

2 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

2 hours ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

3 hours ago