ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் தலிபான் உட்பட 45 பேர் உயிழந்ததாக கூறப்படுகிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் தலிபான் உட்பட 45 பேர் உயிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான ஹெராட்டில் உள்ள அட்ராஸ்கன் மாவட்ட ஆளுநர் அலி அஹ்மத் பகீர் யர் கூறுகையில், காம் சியாரத் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இதுவரை நாற்பத்தைந்து பேர் உயிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தலிபான்களும் அடங்குவர் என்று அவர் கூறினார்.
இறந்தவர்களில் குறைந்தது எட்டு பொதுமக்கள் உள்ளதாகவும் மீதமுள்ள 37 பேரில் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் தலிபான் உறுப்பினர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என கூறினார். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் ஆப்கானிய படைகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
விசாரணையின் முடிவுகள் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுடன் கூறப்படும் எனவும், மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படையினருக்கு உள்ளது என்று கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் இந்த வான்வழித் தாக்குதல்களில் தங்கள் பங்கேற்கவில்லை என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…