அஜித் பற்றி நடிகர் ஜான் கொக்கன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஜான் கொக்கன் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து “வெம்புலி” கதாபாத்திரத்தை அஜித்திற்கு அர்ப்பணிக்கிறேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது ” நான் அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகன். வீரம் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்தது எல்லாம் மறக்கமுடியாத ஒன்று, அஜித் சார் படப்பிடிப்பில் ” வாழ்க்கையில் எப்போதும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். எல்லாத்தையும் தாண்டி நாம போய்ட்டே இருக்கணும். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு நேரம் வரும். அந்த நேரம் வரும் வரை காத்திருக்கவேண்டும் என என்னை ஊக்க படுத்தினார்.
சார்பட்டா பரம்பரை படம் பார்த்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், படம் வெளியானதும் போன் செய்து சார்பட்டா பற்றியும் உங்களுடைய கதாபாத்திரம் பற்றியும் கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோசமாக இருக்கு ஜான்” என பாராட்டினார். நிஜத்தில் அஜித்சார்தான் எனக்கு வாத்தியார்.” என நடிகர் ஜான் கொக்கன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…