கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலக வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று உள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்களான வயதானவர்களே. இந்நிலையில், அமெரிக்காவின், சிகாகோவில், 1 வயது கூட நிரம்பாத குழந்தைக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இது உலகம் முழுவதையும் அதிர்ச்சி அடையும் விதமாக அமைந்தது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனை அந்த மாகாணத்தின் கவர்னரும் உறுதி செய்தார். உலகிலேயே இந்த வைரஸ் பாதிப்பால், 1 வயதுக்குட்ட குழந்தை உயிரிழப்பது, இதுவே முதல் முறை என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு வயது குழந்தைக்கு வேறு உடல் பிரச்சனைகளும் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…