இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க மக்களுக்கு மீண்டும், மீண்டும் அறிவுறுத்தும் அமெரிக்க அரசு.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 3500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸோடு இந்தியா போராடி வரும் நிலையில், சில நாடுகள் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளது. அந்த வகையில், அமெரிக்க அரசும் தனது நாட்டு குடிமக்களை இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என கூறியுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து எவ்வளவு சீக்கிரமாக கிளம்பு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக கிளம்புங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (மே – 5) அவசரகால அமெரிக்க அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து வெளியேற அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. மேலும், “இந்தியாவை விட்டு வெளியேற விரும்பும் அமெரிக்க குடிமக்கள் கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்கனவே இந்தியாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில். இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று மீண்டும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…