அம்லா , டு பிளெஸ்ஸிஸ் அதிரடி ! 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி !

இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள்மோதியது . இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன இருவரும் களமிறங்கினர்.ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்திலே ரபாடா வீசிய பந்தில் திமுத் கருணாரத்ன விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் அவிஷ்கா பெர்னாண்டோ களமிறங்கினர்.
பெர்னாண்டோ , குசல் பெரேரா இருவரின் கூட்டணியில் ரன்கள் சற்று உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய பெர்னாண்டோ பத்தாவது ஓவரில் 30 ரன்களுடன் வெளியேறினர். தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சில் தடுமாறி விளையாடிய குசல் பெரேரா 30 ரன்னுடன் அவுட் ஆனார்.

ஆட்டம் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய குயின்டன் டி கோக் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மலிங்கா வீசிய பந்தில் 15 ரன்னில் வெளியேறினர். 16 பந்தில் 3 பவுண்டரி விளாசினார்.

பின்னர் தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் களமிறங்க ஹாஷிம் அம்லா இருவரும் கூட்டணியாக இணைந்து தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினர். இவர்களின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் திணறினர்.
இவர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.இப்போட்டியில் டு பிளெஸ்ஸிஸ் 96 ரன்னும் , ஹாஷிம் அம்லா 80 ரன்னும் குவித்தனர்.இறுதியாக தென்னாபிரிக்கா அணி 37.2 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025