ஒரு நேரத்தில் 6 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இத்தாலிய பெண்..! அதிர்ச்சியில் மக்கள்..!

Published by
Sharmi

இத்தாலிய பெண் ஒருவர் ஆறு டோஸ் ஃபைசர் கோவிட் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார்.

கொரோனாவிற்கு பிறகு உலகில் நடந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான பல நிகழ்வுகளில் கேள்வி படாத ஒரு கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால் உலகமே பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இருந்தபோதிலும், தடுப்பூசியை பொறுத்தவரை சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளது.  இரண்டு டோஸ் போதுமானதா அதில் வெவ்வேறு நிறுவனங்கள் கலக்கப்படலாமா அல்லது ஒரு டோஸ் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது.  இந்நிலையில், இந்த அனைத்து  கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக ஒரு இத்தாலிய பெண் மாறியிருக்கிறார்.

சமீபத்தில் 23 வயது இத்தாலிய பெண் ஒருவர் ஃபைசர்-பயோஎன்டேக் கோவிட் தடுப்பூசியின் ஆறு டோஸ்களையும் ஒரே நேரத்தில் போட்டுக்கொண்டதாக அந்நாட்டின் தலைப்புச்செய்திகளில் வெளியானது. மேலும் இதனால் அந்த பெண் தவறான அளவை போட்டுக்கொண்டதாக ஏஜிஐ செய்தி நிறுவனம் திங்களன்று வெளியிட்டது.  ஆனால், அதிர்ஷ்டவசமாக தடுப்பூசியின் ஆறு முழு அளவைப் போட்டுக்கொண்ட பிறகும் அந்தப் பெண் எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் சந்திக்கவில்லை.

மேலும், இவரது நல்வாழ்வை பாதுகாக்க இவருக்கு திரவங்கள் மற்றும் பாராசிட்டமால் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த இத்தாலிய பெண்ணுக்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசிக்கு பதிலாக தடுப்பூசியின் முழு குப்பியை தவறாக உபயோகித்தது தெரியவந்துள்ளது. இது தடுப்பூசியின் ஆறு அளவுக்கு சமம் என்றும் கூறியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.

இதுவரை ஃபைசர்-பயோஎன்டேக் கோவிட் தடுப்பூசியின் அதிகபட்ச அளவே நான்கு  அளவுகள் தான். இதுகுறித்து, ஏஎஃப்பி நாட்டின் மருந்து சீராக்கிக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி இஸ்ரேல், ஆஸ்திரேலியா , அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட  நாடுகளில் போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Sharmi

Recent Posts

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

33 minutes ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

3 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

3 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

4 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

4 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

5 hours ago