நடிகர் சரத்குமார் அவர்கள், நடிகர் சூர்யாவை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. தமிழக முதல்வர் முதல் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சரத்குமார் அவர்கள், நடிகர் சூர்யாவை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘ அன்புள்ள சூர்யாவிற்கு, வணக்கம். ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்தேன். நடந்த சம்பவங்களை, சரித்திர நிகழ்வுகளை மறந்தநிலையில், நீதி அரசர் சந்துரு அவர்களின் சமூக அக்கறையை, உலகம் மறந்துவிடக்கூடாது என்ற சிறந்த நோக்கத்தோடும், சமூக அநீதிகளை பிரபலங்கள் எந்த ஒரு தயக்கம் இல்லாமல், வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற “ஜெய்பீம்”
சூர்யாவின் உன்னத எண்ணத்தை முதலில் பாராட்டுகிறேன்.
சரித்திரங்கள் மறப்பதற்கல்ல. அவை கற்றுக்கொடுக்கும் பாடங்களை உலகறியச் செய்ய வேண்டும். அப்போதுதான் நல்வெண்ணங்கள், நாட்டுப்பற்று, சமூக ஒழுக்கம், சமூகநீதி, சமத்துவம் நிலைநாட்டப்படும். அதற்கு எடுத்துக்காட்டு தான் ராசாகண்ணுவின் வழக்கும், அவரது மரணமும்.
ஓர் நீதியை நிலைநாட்ட போராடிய அவரது மனைவியும், நீதி தோற்றுவிடக்கூடாது என்று போராடிய சந்துருவை போலவும், பெருமாள்சாமியை போலவும், நாட்டில் பலர் தோன்ற வேண்டும். நீதி அனைவருக்கும் பொது. இதில் ஏற்றத்தாழ்வு, ஏழை, பணக்காரன், ஜாதி, மத, மொழி, பேதங்கள் கூடாது என்ற நிலை எப்போது வருகிறதோ அன்று தான் நாடு உண்மையான சுதந்திர நாடு.
சிறந்த படைப்பை தந்த சூர்யாவை போற்றுகிறேன். ஞான வேலை வாழ்த்துகிறேன். ராசாகண்ணு, செங்கேணி, தமிழ், சூப்பர்குட் சுப்பிரமணி மற்றும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கும் சக கலைஞர்கள் அனைவரையும், என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து போற்றுகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…