அமெரிக்க ஜனநாயகம் மீது தாக்குதல் – ஜோ பைடன் குற்றச்சாட்டு..!

Published by
murugan

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் 46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், ஜோ பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல குற்றச்சாட்டுகளை  தற்போதைய அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.

மேலும், தேர்தலில் மோசடி நடைபெற்றுளளதாக கூறி வரும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆயுதம் தாங்கிய டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் சென்றதை தொடர்ந்து அப்போது நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஜோ பைடன் வெற்றி ஏற்க மறுத்த டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தனர்.

இதுகுறித்து தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் கூறுகையில், இது அமெரிக்க ஜனநாயகம் மீது தாக்குதல், நவீன காலத்தில் இது போன்ற ஒரு தாக்குதலை நான் பார்த்ததில்லை, தற்போது நிகழ்ந்து இருப்பது சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் , டிவிட்டர் ஃபேஸ்புக் பக்கங்களில் டொனால்டு டிரம்ப் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோ பதிவு வன்முறையை தூண்டும் வகையில் இருந்து இருப்பதாக கூறி அவரது சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து டொனால்டு டிரம்ப் ட்விட்டர் 12 மணி நேரமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் 24 நேரம் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: #Joe Biden

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

17 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

58 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago