ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினியுடன் படையப்பா என்ற படத்தில் நீலாம்பரியாக நடித்து வில்லினா இப்படி தான் இருக்க வேண்டும் என்று காண்பித்தவர் ரம்யா கிருஷ்ணன். அதனையடுத்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாகுபலி இவரை இன்னும் பிரபலமாக்கியது என்றே கூறலாம். தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் தங்களது த்ரோபேக் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் தனது வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் ஒன்றில் தனது இரண்டு பெரியம்மாக்கள் வளையல் போடும் புகைப்படத்தை பகிர்ந்து , அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு புகைப்படத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் தனது அம்மாவே புகைப்படம் எடுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குநரான கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இவர்களுக்கு ஒரு மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…