பக்ரீத் ஸ்பெஷல் : அட்டகாசமான சிக்கன் தம் பிரியாணி எப்படி செய்வது…?

Published by
Rebekal

பக்ரீத் பண்டிகை வந்தாலே பெரும்பாலும் இஸ்லாம் சகோதரர்கள் வீட்டில் பிரியாணி தான் ஸ்பெஷலாக செய்வார்கள். இவ்வாறு பிரியாணி செய்யும் பொழுது தங்கள் உறவினர்கள், அருகிலுள்ள நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வது வழக்கம். ஆடு, மாடு, கோழி மற்றும் ஒட்டகங்களிலும் பிரியாணி செய்வார்கள். ஆனால், சிலருக்கு இந்த பிரியாணி எப்படி செய்வது என தெரியாது. நாம் வழக்கமாக செய்யும் பிரியாணி போல இல்லாமல் இது சற்று வித்தியாசமான முறையிலும், அட்டகாசமான சுவையிலும் இருக்கும். இன்று எப்படி பக்ரீத் ஸ்பெஷல் சிக்கன் தம் பிரியாணி செய்வது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பக்ரீத் பண்டிகை

பக்ரீத் பண்டிகை உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படக்கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளார் அவர்களின் தியாகத்தை நினைவு கூறுவது தான் இந்த பக்ரீத் பண்டிகையின் சிறப்பு.

தமிழகம் முழுவதும் ஜூலை 21ஆம் தேதியாகிய இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாளாகிய இந்த பக்ரீத் நாளில் இறைவனுக்கு பலி செலுத்துவது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் அசைவ உணவுகளை சமைத்து அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்தளித்து உண்டு மகிழ்வது வழக்கம். இதற்காக இன்று நாம் சிக்கன் தம் பிரியாணி பாய் வீட்டு ஸ்டைலில் எப்படி செய்வது என அறியலாம்.

தேவையான பொருட்கள்

  • எண்ணெய்
  • சிக்கன்
  • பாஸ்மதி அரிசி
  • வெங்காயம்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • பிரியாணி மசாலா
  • சீராக தூள்
  • தயிர்
  • கொத்தமல்லி
  • புதினா
  • மல்லி தூள்
  • உப்பு
  • பட்டை
  • கிராம்பு
  • பிரியாணி இலை
  • அன்னாசி பூ
  • ஏலக்காய்
  • இஞ்சி பூண்டு விழுது
  • குங்கும பூ
  • நெய்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிராம்பு, பட்டை, அன்னாசி பூ, ரோஜா இதழ், உப்பு தேவையான அளவு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து 80% வேகவைத்து வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

அதன் பின் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு சிக்கன் எடுத்து, அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தயிர், பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துள்ள வெங்காயம் சிறிதளவு, பிரியாணி மசாலா,  சீரகத்தூள், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு இவற்றை ஒரு கடாயில் சேர்த்து 15 நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் தம் போடுவதற்கு ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி கொள்ள வேண்டும். பின் நாம் வேக வைத்து எடுத்துள்ள சிக்கனை முதலில் போட வேண்டும். அதன் பின்பு வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்க்க வேண்டும். பின்பு மீண்டும் சிக்கனை போட்டு அதற்கு மேல் பாஸ்மதி அரிசியை போட்டு, பொரித்து வைத்துள்ள வெங்காயம் புதினா இலை, கொத்தமல்லி ஆகியவை சேர்க்க வேண்டும்.

அதனுடன் குங்குமப் பூவை சூடான பாலுடன் கலந்து ஊற்ற வேண்டும். பின்பு மீண்டும் மீதமுள்ள அனைத்து சிக்கனையும் சேர்த்து கொள்ள வேண்டும். இதன் மேல் வேக வைத்து எடுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து மேலே கொத்தமல்லி, புதினா, குங்குமப்பூ பால், பொரித்த வெங்காயம் மற்றும் நெய் ஊற்ற வேண்டும். பின் காற்று வெளியேறாதபடி மூடி தம் போட வேண்டும்.

 

அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் அட்டகாசமான ஹைதராபாத் பிரியாணி தயார். பக்ரீத் தினமான இன்று உங்கள் வீட்டில் ஆடு, மாடு வாங்க முடியாவிட்டாலும் சிக்கன் வாங்கி வீட்டில் இந்த தம் பிரியாணியை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்.

Published by
Rebekal

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

30 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

56 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago