பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாராம்.
அமெரிக்காவின், அந்நாட்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சீன மொபைல் ஆப்களுக்கு எதிராக விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அண்மையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்கப்பட்ட மென்பொருள்களால், அமெரிக்கர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு ஆபத்துகள் குறித்து விரைவில் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுக்க உள்ளார்.’ என மைக் பாம்பியோ தெரிவித்தார்.
முன்னதாக டிக் டாக் செயலியானது, தனி மனித தகவல்களை பாதிக்கும் வகையில் இருப்பதால், அந்த ஆப் அமெரிக்காவில் தடை செய்யப்படும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, டிக் டாக் செயலியை அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…