இந்த ஆண்டு காதலர் தினம் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கோலாகலமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவ காரணமாக காதலர் தின கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுமா என சில இடங்களில் சந்தேகமான சூழ்நிலை இருந்தாலும் இலங்கையில் காதலர் தினம் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
விதிகளை மீறி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மற்றும் அதற்கான கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அந்நாட்டின் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அவர்கள், சுகாதாரத் துறையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்தப்படக் கூடிய காதலர் தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அவ்வாறு கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…