மீரா மீரா மிதுனுக்கு நடந்தது கல்யாணம் இல்லையாம் ,நிச்சயதார்த்தம் என்றும் ,அடுத்த வருடம் காதலர் தினத்தன்று திருமணம் என்றும் கூறப்படுகிறது .
மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாவதே இவரது வழக்கம். வழக்கமாக ரசிகர்கள் இவரை திட்டியும், ஆபாசமாக பேசியும் வருகின்றனர்.
அண்மையில் மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் இது ரியல் என்றும், இதையும் காப்பி செய்யாதீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.. மேலும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வீடியோவில் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து டைம் ஆஃப் இந்தியாவிடம் அவர் கூறியதாவது, எனக்கும், என் காதலருக்கும் நிச்சயதார்த்தம் ஆகி விட்டது என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த லாக்டவுனால் எனக்கு கிடைத்த இந்த நாட்கள் வாழ்வின் சிறந்த நாட்களாக மாறியதாகவும், சாதாரண பெண்களை போன்று நானும் இந்த தருணத்தை சந்தோஷமாக அனுபவித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது வருங்கால கணவரின் பெயரரையோ, என்ன செய்கிறார் என்பதை தெரிவிக்க விரும்பவில்லை என்றும், எனது திருமணம் நடக்கும் வரை அவரை பற்றிய எந்த தகவலும் வெளியிட மாட்டேன் என்று கூறியுள்ளார். இவரது ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் இந்த செய்தி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மீரா மிதுனின் வருங்கால கணவர் யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…