முன்றாவது முறையாக திருமணம் செய்யவிருக்கும் பிக்பாஸ் வனிதா.!

Published by
Ragi

பிக்பாஸ் பிரபலமான வனிதா அவர்கள் மூன்றாவதாக பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் ‘சந்திரலேகா’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். சமீப காலங்களில் அவர் பல சர்ச்சைக்கு உள்ளாகிய போதிலும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கைவிடாமல் சினிமாவில் மட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையிலும் பிடித்து நின்றார். இதனையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் – 3 இல் கலந்து கொண்டு அனைத்து போட்டியாளர்களையும் வறுத்து எடுத்து விட்டார் என்றே கூறலாம். அதன் மூலம் பிரபலமான வனிதா அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் டைட்டிலையும் தட்டி சென்றார். தற்பொழுது யூடியூப் சேனலை தொடங்கி பிஸியாக வலம் வரும் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஆம் வரும் ஜூன் 27ம் தேதி பீட்டர் பவுல் என்பவருடன் மூன்றாவது திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகிய இவருக்கு 2பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட வனிதா நடன இயக்குனரான ராபர்ட் அவர்களுடன் பழக்கம் இருந்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாக கூறிய இவர்களுக்கு சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. தற்போது மூன்றாவதாக திருமணம் செய்யவிருக்கும் பீட்டர் பவுல் யார் என்ன என்பதை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்பொழுதுள்ள கொரோனா காரணமாக எளிய முறையில் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி! 

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

32 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

3 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

5 hours ago