BiggBoss 5 – day 3 : இமான் அண்ணாச்சி வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவமா…?

Published by
லீனா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 நாள் நாள் வீட்டிற்குள் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.

பிக்பாஸ் நிகச்சியின் 3-வது நாளான நேற்று, தளபதி விஜய் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு மிகவும் கலகலப்பாக நடனமாடுகிறார்.அதன் பின் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தயாராகிறார்கள்.

இமான் அண்ணாச்சியின் வாழ்க்கை 

இமான் அண்ணாச்சி அவர்கள் தனது வாழ்க்கையை குறித்த சில குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஏரல். என்னுடைய முழு பெயர் இம்மானுவேல். என்னுடைய கனவாக இருந்தது சினிமாவில் களம் இறங்க வேண்டும் என்பது தான். ஆனால் இதற்கு பல முறை முயற்சி செய்தும் தோல்வியே சந்தித்தேன்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக முதலில் சென்னைக்கு சென்றேன். அங்கு சென்றவுடன் முதன் முதலாக நான் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தேன். பின்பு அந்த மளிகை கடைக்காரருக்கு நான் சினிமாவில் நடிப்பதற்காக வந்துள்ளேன் என்று தெரிந்தவுடன் ஒரு மாதத்திலேயே கடையிலிருந்து வெளியே அனுப்பினார்.

அதனை தொடர்ந்து பிரபலமான கேமரா விற்பனை செய்யும் கடை ஒன்றில் சேர்ந்தேன். அங்கு வேலை பார்த்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் வெளியே வந்து, சாலையோர காய்கறிக்கடை தொடங்கினேன். இவ்வாறு பல்வேறு தடைகளைத் தாண்டி 18 வருடங்களுக்கு பின்பு விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து ஒரு சிறிய தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது சிறு பிள்ளைகள் உடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது/ இதன்மூலம் இம்மானுவேல் என்ற நான் மக்கள் மத்தியில் இமான் அண்ணாச்சி என்ற பெயரோடு பிரபலமானேன்.

மேலும் அவர் கூறுகையில் இதுவரை ஹீரோயின் ஹீரோக்கள் பிக்பாஸ் டைட்டிலை பெற்றுள்ளனர். இந்த முறை காமெடியன் ஆகிய நான் வெல்வதற்கு அனைவரும் தங்களது ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இவரது உரைக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் விருப்பம் தெரிவித்த நிலையில் மற்றும் சிலர் இவரது கதையை விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

பாத்ரூம் கிளீனா இருந்துச்சா…!

பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களிடம், ராஜு அவர்கள் பாத்ரூம் சுத்தமாக இருந்ததா என கேள்வி எழுப்புகிறார். அதற்க்கு சிலர் இல்லை என பதிலளிக்கின்றனர். அதற்கு ராஜு, நீங்கள் பாத்ரூம் போகும் போது சுத்தமாக இல்லை  என்றால், நீனால் வெளியே வரும் போது சுத்தமாக உள்ளதா என்று பாருங்கள் என கூறுகிறார்.

பட்டைய போட்டு ஊற ஏமாத்துறியா…?

அபிஷேக் தமிழ் செல்வியிடம் பட்டைய போட்டு ஊற ஏமாத்துறியா என கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் இப்படி சொல்லத எனக்கு கோவம் வரும் என கூறுகிறார். பின் அவர் அண்ணாச்சியிடம் இப்படி சொல்லலாமா? என கேட்கிறார். அதற்கு இமான் அண்ணாச்சி நீங்க வருத்தப்படாதீங்கமா, 2 லட்சம் ஒட்டு போச்சு இப்ப இவனுக்கு என்று கூறி, சலசலப்பான இடத்தை, கலகலப்பாக மாற்றுகிறார்.

தனது வாழ்க்கையை பற்றி கண்ணீருடன் பகிர்ந்த ஸ்ருதி…! 

மாடல் சுருதி அவர்கள், தனது தாயும், தானும் பட்ட கஷ்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். எனது தாய் 2-வது தாரமாக திருமணம் செய்து கொண்டார். இதனால் எனது தாய் பல துன்பங்களை அனுபவித்த நிலையில், நான் எனது தந்தைக்கு தேவையில்லாத குழந்தையாக தான் பிறந்தேன். எனது தந்தையின் மரணம் வரை பல இன்னல்களை அனுபவித்தேன்.

தந்தையின் மரணத்திற்கு பின் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எண்ணினேன்.  அனால்,அதற்கு பின் தான் எனது வாழ்க்கையில் கஷ்டமே ஆரம்பித்தது. எனது தந்தையின் மரணத்திற்குப் பின்பு உண்ணும் உணவிற்கே மிகவும் கஷ்டமான சூழல் ஏற்பட்டது. உறவுகள் யாரும் கைகொடுக்காத நிலையில், பல்வேறு இன்னல்களுக்கு பின்பு எனது பள்ளியில் பாஸ்கெட் பால் விளையாடுவதற்காக அந்த அணி இணைந்தேன் அதில் வெற்றியும் பெற்று அதிலிருந்து வெற்றியோடு வெளியே வந்த நிலையில், பல முயற்சிகளுக்கு பின் பிரபலமான கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.

ஆனால் எதுவும் எனக்கு பொருத்தமாகாத சூழலில் சென்னைக்கு சென்றேன் அங்கு மாடல் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் தற்செயலாக கலந்துகொண்ட பின், வெற்றியை பெற்று அதனைத் தொடர்ந்து பல இடங்களில் நான் வெற்றி பெற்று இன்று இந்த அளவுக்கு இருக்கிறேன் என்று கூறி கண்ணீருடன் தனது கதையை முடித்துக் கொண்டார். இதற்க்கு 17 போட்டியாளர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் மாடலிங் நிகழ்ச்சி 

பிக் பாஸ் வீட்டுக்குள் மாடலிங் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது நடை மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியை திருநங்கை அவர்கள் தொகுத்து நடத்தியுள்ளார்.

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

17 minutes ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 hour ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

3 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

4 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

4 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

4 hours ago