தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா, யோகி பாபு, விவேக் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்திலிருந்து ‘சிங்க பெண்ணே’ எனும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பாலிவுட் போல பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அந்த விழாவிற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்து ஒரு விருது வழங்கும் விழா போல நடத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இப்படத்தின் ஷூட்டிங் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…