தனுஷிற்கு ஜோடியாகும் பிகில் பட முக்கிய நடிகை.?

Published by
பால முருகன்

தனுஷிற்கு ஜோடியாக நானே வருவேன் படத்தில் இளம் நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணிகளில் ஒன்றி தனுஷ் -செல்வராகவன்- யுவன் கூட்டணி என கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, இந்த கூட்டணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது என்றே கூறலாம்.

மீண்டும் இவ்கூட்டணி “நானே வருவேன்” என்ற படத்தின் மூலம் இணையவுள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கான போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என இயக்குனர் செல்வராகவன் அறிவித்திருந்தார். ஆனால், தற்போது நடிகர் தனுஷ் மாறன் படத்திலும், திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வருவதால் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனும் பீஸ்ட் படத்தில் கமிட் ஆகியுள்ளதால் பீஸ்ட் படத்தில் நடிக்க செல்வதற்கு முன்பே நானே வருவேன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், இதில் ஒரு தனுஷிற்கு ஜோடியாக மேயாத மான்,பிகில்,மகாமுனி ஆகிய படங்களில் நடித்த இந்து ஜா ரவிசந்திரன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பை வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago