Black Friday Deals: மொபைல் வாங்கப் போறீர்களா? இதை விட சிறந்த நேரம் கிடைக்காது.. உடனே முந்துங்கள்!

Published by
Surya

பிளிப்கார்டீன் Black Friday Deals விற்பனையில் அதிரடி விலைக் குறைப்பில் மொபைல்கள் விற்பனை செய்து வரும் நிலையில், அதுகுறித்து காணலாம்.

அண்மையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ், அமேசானின் கிரேட் இந்தியன் பேஸ்டிவல் விற்பனை மூலம் குறையாக விலையில் ஐ-போன், ஒன்ப்ளஸ் உள்ளுட பிளாக் ஷிப் மொபைல்கள், லேப்டாப், வீடு உபயோகப் பொருட்கள் விற்கப்பட்டு வந்தது. இந்த விற்பனையில் சிலரால் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது Black Friday Deals விற்பனையில் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த விற்பனை நேற்று முதல் தொடங்கி, வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்தவகையில், ஐ-போன், ரியல்மி, ரெட்மி, சாம்சங் உள்ளிட்ட மொபைல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பலரின் கனவாய் இருக்கும் ஐபோன், இந்த விற்பனையில் குறைந்த விலையில் வாங்கலாம்.

ஐபோன் எஸ்இ 2020:

இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஐபோன் எஸ்இ 2020-ன் விலை, ரூ.32,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத விலையில் இந்த ஐ போன் விற்கப்பட்டு வருகிறது. இதில் 4.7 இன்ச் ரெட்டினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளே, 750×1334 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. இதில் ஆப்பிளின் புதிய மற்றும் அதிவேகமான A13 சிப்-ஐ கொண்டது. இது, ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவைகளில் இருக்கும் ப்ராஸஸர். மேலும், பின்புறத்தில் 12 MP f/1.8 அபேசர் சிங்கள் கேமரா வசதி உள்ளது. இதில் 4K60fps வரை வீடியோகள் எடுக்கலாம். முன்புறத்தில் 7 MP f/2.2 அபேசர் கேமரா உள்ளது. இதற்கு சிறப்பு எக்ஸ்சேஞ்ச் வசதி உள்ளது.

ஐபோன் XR:

ரூ.52,500 ருபாய் மதிப்பிலான ஐபோன் XR ரக மாடல், ரூ.38,999-க்கு விற்கப்பட்டு வருகிறது. ஐபோன் XR மீது எக்ஸ்சேன்ஜ் வசதியும் உண்டு. அவ்வாறு வாங்கினால் ரூ.14,300 வரை மிச்சப்படுத்தலாம். ஐபோன் XR, 6.1 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே வசதி கொண்டுள்ளது. இது ஆப்பிளின் ஏ-12 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. மற்றபடி அனைத்தும், ஐபோன் எஸ்இ 2020-ல் உள்ளது போல அனைத்தும். மேலும் இதன் 128 GB வேரியண்ட், 43,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரெட்மி மொபைல்கள்:

இந்த Black Friday Deals விற்பனையில் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனை ரூ.6,999-க்கு வாங்கலாம். அதனைப்போல, அதற்கு அடுத்த வந்த ரெட்மி 9-ஐ ஸ்மார்ட்போனையும் ரூ.8,999-க்கு வாங்கலாம். மேலும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனை (6,64) ரூ.11,499-க்கும், ரெட்மி 9 ப்ரைம் மொபைலை ரூ.10,999-விலையிலும், ரெட்மி நோட் 9 ப்ரோ ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ்:

பலரின் மனதை கொள்ளைகொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ், இந்த Black Friday Deals விற்பனை மூலம் ரூ.49,999-க்கு (8+128) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை, ரூ.73,999 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலை மீது எக்ஸ்சேன்ஜ் வசதியும் உண்டு. அவ்வாறு வாங்கினால் ரூ.14,300 வரை மிச்சப்படுத்தலாம். இந்த விற்பனையில் SBI வங்கி கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

Published by
Surya

Recent Posts

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

24 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago