ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் 30 நிமிடங்களில் நடந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென அமெரிக்க – தலிபான்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் ஆங்காங்கு வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று காலை ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. முதல் வெடிவிபத்து காலை 8 மணியளவில் காபூலில் மேற்கிலுள்ள தாருலமன் சாலையில் நிகழ்ந்துள்ளது. அடுத்ததாக 8.15 மணி அளவில் கார்ட்-இ-பர்வான் எனும் பகுதியில் நடைபற்றுள்ளது. இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்த இருவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…