உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், அங்கு இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அப்போது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு தருமாறு இந்திய பிரதமரை கேட்டுக் கொண்டதாக கேட்டுக்கொண்டதாக ட்விட் செய்துள்ளார். மேலும், இந்த உரையாடலின்போது ரஷ்யாவின் தாக்குதல் குறித்தும், உக்ரைன் போர் நிலவரம் குறித்தும் எடுத்துரைத் துள்ளார். உக்ரைன் குடியிருப்புகளின் மீது ரஷ்யா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மோடியிடம் செலன்ஸ்கி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…