அருண் விஜயின் 33 வது திரைப்படத்தில் நடிகர் ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
நடிகர் அருண் விஜய்யின் 33வது திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். இது அவருக்கு 16வது திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது .
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இரு நடிகர்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஹரி – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் தமிழில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…