தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
தர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ’18 ரீல்ஸ்’-ன் உரிமையாளர் எஸ்.பி.சௌத்ரி தனது நிறுவனத்திலுள்ள அனைவருடனும் இணைந்து தர்பார் படத்தை காணவுள்ளாராம். இதுகுறித்து, அவர் கூறுகையில், நான் தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். ஒவ்வொரு முறை தலைவர் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போதும் எனக்கு திருவிழா போல தான் இருக்கும்.
மேலும், இந்த முறை வெளியாகும் தலைவரின் ‘தர்பார்’ படத்தை வித்தியாசனமான முறையில் கொண்டாட விரும்பினேன். அதற்காக எனது நிறுவனத்தில் உள்ள அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஆகையால், இன்று கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…