சித்ராவின் கணவர் நல்லவர் கிடையாது.! பகீர் தகவலை வெளிப்படுத்தும் நடிகை ரேகா நாயர்.!

Published by
Ragi

சித்ராவின் கணவர் ஹேம்ந்த் நல்லவர் கிடையாது என்று சித்ராவின் நெருங்கிய தோழியும் நடிகையுமான ரேகா நாயர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது .

மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை சித்ரா தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் .தனது சீரியலுக்கான படப்பிடிப்பை முடித்து விட்டு நள்ளிரவு தான் தங்கியிருந்த ஓட்டலில் கணவரான ஹேமந்துடன் வந்ததாகவும்,அங்கு அவர் குளிப்பதாக கூறி விட்டு ஹேமந்த் அவர்களை அறையிலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்த போது பட்டு புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சித்ரா காணப்பட்டார் . இதனிடையே சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்துள்ளது.எனவே பல கோணங்களில் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சித்ராவின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகை, நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் சித்ராவின் நெருங்கிய தோழியும் ,நடிகையுமான ரேகா நாயர் பேட்டி ஒன்றில் சித்ராவின் மறைவு குறித்தும் ,அவரது கணவர் குறித்தும் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

அதில் ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக ஒரே அறையில் தங்கி 3 ஆண்டுகாலம் என்கூட இருந்த சித்துவின் மரணம் குறித்த செய்தி வதந்தியாக இருக்க கூடாதா என்று ஏங்கியதாக கூறிய அவர் கடந்த ஒன்றரை வருடங்களாக மிகவும் அமைதியாக காணப்பட்டதாகவும் கூறினார் .அவரது நிச்சயதார்த்த புகைப்படங்களை பார்த்த போது அவர் கணவராக தேர்வு செய்த நபர் நல்லவன் இல்லை என்று சித்ராவிடம் கூறியதாக கூறினார்.ஏனெனில் அவரை தனக்கு முன்னதாக தெரியும் என்றும், ஹேமந்த் என்பவரை கிட்டத்தட்ட சென்னையில் உள்ள அனைத்து பெண்களுக்கும் தெரியும் என்றும் ,அவர் அனைத்து பப்களிலும் ,பார்களிலும் வருபவர் என்றும் ,அவர் நல்லவர் இல்லை என்றும் சித்ராவிற்கும் நன்றாக தெரியும்.

சித்ரா கடந்த ஆறு மாதங்களாக ஒரே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், ஏனெனில் எப்போதும் ஹேமந்த் கால் செய்து எங்க இருக்க ,என்ன பண்ற என்று கேள்விகள் எழுப்பி சித்ரா எப்போதும் பரப்பான சூழலிலே இருந்ததாகவும் , எப்போதும் வீடியோ கால் ,ஆடியோ கால் என அவரிடமே பேசி கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் பெரும்பாலும் காதலர்கள் ஒன்றாக இருந்தால் சேர்ந்து குளிப்பது ,தூங்குவது என்று இருப்பார்கள்.அப்படி இருக்க இவர்களுக்கு நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது.அப்படி இருக்கையில் ஹேமந்த்தை எதற்கு அறையிலிருந்து வெளியே அனுப்ப வேண்டும்.மொத்தத்தில் இது தனக்கு தற்கொலையாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.பல கஷ்டங்களை தாண்டி இந்த நிலையில் இருக்கும் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்றும் ,அவர் ரொம்பவே தைரியசாலி என்று கூறி எனக்கு இது தற்கொலையாக தோன்றவில்லை.தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு இதுவும் ஒரு கொலை என்று கூறியுள்ளார்.

மேலும் சித்ராவின் கணவரின் வாழ்க்கை மர்மமான வாழ்க்கை தான் ,அவரது தாய் , தந்தை குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஹேமந்த் குறித்து பல குற்றச்சாட்டுக்களை ரேகா நாயர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

27 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

5 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago