சியான் 60 படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் தனது 60 வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் மற்றும் நடிகரான துருவ் விக்ரமும் இணைந்து நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. கேங்க் ஸ்டார் படமாக உருவாகவுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதலில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவிருந்த நிலையில், சில காரணங்களால் அவர் இசையமைக்கவில்லை அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…