உலக முழுவதும் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி கொரோனா வைரஸ் கொத்துக்கொத்தாக உயிர்களை கொன்று தீர்த்து வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த மருத்துவத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தன்னலமற்ற சேவையாற்றி வருகின்றனர். மேலும் கொரோனா ஒரு தொற்று நோய் என்பதால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் வேகமாக பரவிவருகிறது.
இந்நிலையில், போதிய முககவசங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதிலும் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் பரவுகிறது. வைரஸ் பரவிய நபர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவ ஊழியர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் 22 ஆயிரத்து 73 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைப்பு கூறுகையில், பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தே மருத்துவத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பரவுவதாகவும், அதே சமயம் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வைரஸ் பரவுவதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…