உலகில் நடக்கும் அனைத்து போர்களையும் உடனே நிறுத்த அழைப்பு… ஐநா பொதுச்செயலளர் அழைப்பு

உலகையே அச்சுறுத்திவரும் இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. ஆனால், ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில் மறுபக்கம் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுச்சண்டை, பயங்கரவாத தாக்குதல்கள், கிளர்ச்சியாளர்கள் என இடைவிடாமல் போர்கள் அரங்கேறித்தான் வருகிறது. இந்நிலையில், உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்தும் படி உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்ட்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ” உலகின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களையும், சண்டைகளையும் உடனடியாக நிறுத்தும்படி நான் அழைப்பு விடுக்கிறேன் என்றும், விரோதங்கள், அவநம்பிக்கை, பகைமை ஆகியவற்றில் இருந்து பின்வாங்கி ஆயுத சண்டைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது உயிரை காக்க உண்மையான போர் செய்யும் (கொரோனா வைரஸ்) நேரம் வந்து விட்டது’’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025